மூணாறு-மூணாறில் 74வது பின்லே சுழற்கோப்பைக்கான கால்பந்தாட்டப் போட்டியில் கூடாரவிளை எஸ்டேட் அணி வெற்றி பெற்றது.
மூணாறில் தேயிலை எஸ்டேட்டுகளுக்கு இடையே தொழிலாளர்கள் பங்கேற்கும் பின்லே சுழற்கோப்பைக்கான கால்பந்தாட்டம் போட்டிகளை கே.டி.எச்.பி. கம்பெனி ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
இறுதியாக 2019ல் போட்டிகள் நடந்த நிலையில் கொரோனாவால் மூன்று ஆண்டுகள் போட்டிகள் முடங்கின.
இந்தாண்டு 74வது பின்லே சுழற்கோப்பைக்கான போட்டிகள் மார்ச் 11ல் துவங்கியது. 13 அணிகள் மோதின. அதன் இறுதி போட்டி நேற்று நடந்தது.
கூடாரவிளை எஸ்டேட் அணியும், நல்லதண்ணி எஸ்டேட் அணியும் மோதின.
அதில் 4-:3 என்ற கோல் கணக்கில் கூடாரவிளை எஸ்டேட் அணி வெற்றி பெற்றது.
மாட்டுபட்டி எஸ்டேட் அணி சிறந்த அணியாகவும், லாக்காடு எஸ்டேட் அணியைச் சேர்ந்த வேலுஹரிகரன் சிறந்த வீரராகவும், கூடாரவிளை எஸ்டேட் அணி கோல்கீப்பர் பரமசிவன் சிறந்த கோல்கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்ற அணி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு கே.டி.எச்.பி. கம்பெனி நிர்வாக இயக்குனர் மாத்யூ ஆப்ரகாம் மனைவி கீதா கோப்பைகளை வழங்கினார். தற்போது கோப்பையை வென்ற கூடாரவிளை எஸ்டேட் அணி 2019 லும் கோப்பை கைபற்றியது குறிப்பிடத்தக்கது.