உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

Updated : ஏப் 01, 2023 | Added : ஏப் 01, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
திருவாரூர்: உலக புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் இன்று(ஏப்ரல் 01) கோலாகலமாக நடந்தது.திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில் பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இங்கு நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது திருவாரூர் தேர். ஒவ்வோர் ஆண்டும்

திருவாரூர்: உலக புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் இன்று(ஏப்ரல் 01) கோலாகலமாக நடந்தது.




latest tamil news


திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில் பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இங்கு நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது திருவாரூர் தேர். ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.


96 அடி உயரம், 300 டன் எடை கொண்ட ஆழித்தேரின் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மிக பிரமாண்டமான ஆழித்தேரின் தியாகராஜா சுவாமி வீற்றிருக்க 4 வீதிகளில் வீதியுலா வருவதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். இந்தாண்டு ஆழித்தேர் திருவிழா அஸ்த நட்சத்திரத்தில் கொடியேறி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் இன்று ஆயில்ய நட்சத்திரத்தில் சிறப்பாக துவங்கியது. தேரை மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.



latest tamil news

இன்று காலை 7.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடிக்கப்பட்டது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு ஆழித்தேரின் முன்பு நிறுத்தப்பட்டு ஆரூரா தியாகேசா கோஷம் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

Ksrinivasan Kbalaji - BANGALORE,இந்தியா
01-ஏப்-202312:36:15 IST Report Abuse
Ksrinivasan Kbalaji ஹிந்து விரோதி தேச துரோகி திருடன் மகனை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்லும் ஹிந்துக்கள் மட்டும் தயவு செய்து கோயிலுக்கு செல்லுங்கள். \\
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
01-ஏப்-202311:58:45 IST Report Abuse
Ramesh Sargam ஈஸ்வரா போற்றி போற்றி போற்றி.
Rate this:
Cancel
Sriniv - India,இந்தியா
01-ஏப்-202310:43:25 IST Report Abuse
Sriniv ஆரூரா தியாகேசா சரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X