புதுடில்லி, ஏப். 1-
செஸ் கிராண்ட்பிரிக்ஸ் தொடரின் ஆறாவது சுற்றில் இந்தியாவின் வைஷாலி 'டிரா' செய்தார்.
பெண்களுக்கான செஸ் கிராண்ட் பிரிக்ஸ் தொடர் நான்கு கட்டமாக நடத்தப்படுகின்றன. முதல் இரு தொடர் ஆஸ்தானா (2022), முனிக்கில் (2023, பிப்.,) நடந்தன. மூன்றாவது தொடர் டில்லியில் நடக்கிறது. இந்தியாவின் ஹம்பி, ஹரிகா, வைஷாலி உட்பட 10 பேர் பங்கேற்றுள்ளனர்.
நேற்று ஆறாவது சுற்று நடந்தது. இந்தியாவின் வைஷாலி, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரோவை எதிர்கொண்டார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார் வைஷாலி. இருவரும் துவக்கத்தில் இருந்தே சம பலத்தை வெளிப்படுத்தினர். இப்போட்டி 35 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
ஆறு சுற்று முடிவில் சீனாவின் ஜு சினெர் (4.0), கஜகஸ்தானின் பிபிசாரா (4.0) முதல் இரு இடத்தில் உள்ளனர். இந்தியாவின் ஹம்பி (2.5) 6வது, வைஷாலி (2.0) 9வது, ஹரிகா (1.5) 10வது இடங்களில் உள்ளனர்.