மதுரை: கோவை வேளாண் பல்கலையின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் கீழ் உள்ள பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் எள், நிலக்கடலை மீதான விலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுக்கு 9.49 லட்சம் டன் நிலக்கடலை உற்பத்தி செய்யப்படுகிறது. திருவண்ணாமலை, விழுப்புரம், வேலுார், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரியில் நிலக்கடலை அதிகம் பயிரிடப்படுகிறது. திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூட ஆய்வின் படி மே மாத அறுவடையின் போது, பண்ணை விலை கிலோ ரூ.75 முதல் ரூ.80 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கோடைக்கால வரத்தை பொறுத்து நிலக்கடலை விலையில் சிறிய ஏற்ற இறக்கம் இருக்கும் என்பதால் விவசாயிகள் அதற்கேற்ப விற்பனை முடிவுகளை எடுக்கலாம்.
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூட ஆய்வின் படி எள் விலை கிலோ ரூ.120 முதல் ரூ.125 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு: 0422 - 2431 405.