கோவை: கோவை மரக்கடை மேம்பால ரவுண்டானா சுவரில், கோவை மாநகராட்சியால் மருதமலை படமும், முருகர் படமும் வரையப்பட்டிருந்தது. அந்த முருகர் படம் மீது சமூக விரோதிகளால், கரி பூசப்பட்டது.இதை அறிந்ததும் ஹிந்து முன்னணி பொறுப்பாளர்கள் அங்கு திரண்டனர். ஹிந்துக்களின் மனதை வேதனைப்படுத்தும் இந்தசெயலை செய்த சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என ஹிந்துமுன்னணி பொறுப்பாளர்கள், வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.