வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியா மலேசியா இடையிலான வர்த்தகம் இந்திய ரூபாயில் நடக்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியா - மலேசியா இடையேயான வர்த்தகம் இந்திய ரூபாயில் நடக்கும். அதேநேரத்தில், இதற்கு முன்பு இருந்த நாணய பரிவர்த்தனை முறையும் தொடரும். இந்திய ரூபாய் மூலம் சர்வதேச பணிபரிவர்த்தனை மேற்கொள்வதற்கு கடந்த 2022 ஜூலையில் இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த முயற்சியானது உலகளாவிய வர்த்தகத்தின் வளர்ச்சியை எளிதாக்குவதையும், இந்திய ரூபாயின் உலகளாவிய வர்த்தகம் நடைபெறுவதை ஆதரிப்பதையும் நோக்கமாக கொண்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.