வாழப்பாடி: பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை துறையின் மூலம், அட்மா திட்டத்தில், உள் மாநில அளவிலான விவசாயிகள் பயிற்சி, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். பயிற்சி பயணத்தை வேளாண்மை உதவி இயக்குநர் வேல்முருகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இப்பயிற்சியில் சிறு தானியம் உற்பத்தினை பெருக்குதல், மதிப்பு கூட்டுதல், மற்றும் செயல் விளக்கம் உள்ளிட்டவை குறித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சிறந்த முறையில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். விவசாயிகள் பயிற்சி முடித்து இன்று வந்தடைந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜ்குமார் மற்றும் பிரியங்கா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.