திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில், புல்லரம்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மேலானுார் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ், 20, என்பவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார்.
போலீசார் அவரை விரட்டிப் பிடித்து சோதனையிட்டதில், அவரிடம் 10 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சுபாஷை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement