சாலை சந்திப்பில் உள்ள மின் கம்பத்தில் படரும் செடிகள்
ஊத்துக்கோட்டை பேரூராட்சி, செட்டித் தெரு செல்லும் சாலை சந்திப்பில், ஒரு மின் கம்பத்தில் செடி படர்ந்து வளர்கிறது.
இந்த செடி, தொடர்ந்து வளர்ந்து, புதர் போல் ஆகிவிடும். அப்போது, இதனால் மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, ஊத்துக்கோட்டை மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மின் கம்பத்தில் படர்ந்து வளரும் செடியை அகற்ற வேண்டும்.
- -வி.கணேசன், ஊத்துக்கோட்டை.
சாய்ந்த மின் கம்பம் சீரமைக்கப்படுமா?
திருத்தணி தாலுகா, பூனிமாங்காடு - பொன்பாடி செல்லும் மாநில நெடுஞ்சாலையில், 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
மேலும், இச்சாலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள், கார், வேன் மற்றும் இரண்டு அரசு பேருந்துகள் சென்று வருகின்றன. இந்நிலையில், கொல்லகுப்பம் கிராமம் அருகே, மாநில நெடுஞ்சாலையோரம் மின் கம்பம் சாய்ந்து கிடக்கின்றன.
பல மாதங்களாக சாய்ந்து கிடக்கும் மின் கம்பத்தை சீரமைக்காமல் உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டுகிறேன்.
- -எஸ்.வெங்கடேசன், கொல்லகுப்பம்.