டில்லியில் இளம் பெண் கொடூர கொலை: 800 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்| Young woman brutally murdered in Delhi: 800-page chargesheet filed | Dinamalar

டில்லியில் இளம் பெண் கொடூர கொலை: 800 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

Updated : ஏப் 01, 2023 | Added : ஏப் 01, 2023 | கருத்துகள் (6) | |
புதுடில்லி: டில்லியில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இளம் பெண் பலியான வழக்கில் 800 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செயதனர்.புதுடில்லியில் கடந்த டிசம்பர்.31-ம் தேதி நள்ளிரவு புத்தாண்டு தினத்தில், அஞ்சலிசிங் என்ற 20வயது இளம் பெண் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது ஒரு கார் மோதியது. இதில் கீழே விழுந்த அந்த இளம் பெண், அந்த காரில் சிக்கினார். காரில்
Young woman brutally murdered in Delhi: 800-page chargesheet filed  டில்லியில் இளம் பெண் கொடூர கொலை: 800 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லியில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இளம் பெண் பலியான வழக்கில் 800 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செயதனர்.

புதுடில்லியில் கடந்த டிசம்பர்.31-ம் தேதி நள்ளிரவு புத்தாண்டு தினத்தில், அஞ்சலிசிங் என்ற 20வயது இளம் பெண் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது ஒரு கார் மோதியது. இதில் கீழே விழுந்த அந்த இளம் பெண், அந்த காரில் சிக்கினார். காரில் குடிபோதையில் இருந்தவர்கள், 13 கி.மீ.., துாரத்துக்கு அந்தப் பெண்ணை இழுத்துச் சென்றனர்.இதில் அந்தப் பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.


latest tamil news


இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து கார் டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவின் பேரில் சிறப்பு போலீஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு அதன் விசாரணை அறிக்கைள் சமர்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக டில்லி போலீசார் 117 சாட்சியங்களை விசாரித்து 800 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X