வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்ற பல்கலை தேர்வில் மாணவர் ஒருவர் தன்னுடைய விடைதாளில் இந்திபாடல்களை எழுதி நிரப்பி உள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
![]()
|
பள்ளி இறுதி தேர்வுகளில், படிப்பில் சுமாரான மாணவர்கள் தங்களுடைய தேர்வு விடை தாளில் தங்களின் விருப்ப மத கடவுளே துணை என எழுதுவது வழக்கம். அல்லது விடை தாளில் ஆசிரியரிடம் தங்களின் இயலாமையை வெளிப்படுத்தி கெஞ்சும் வகையில் விடைத்தாளின் நடுவில் தனிப்பட்ட கடிதம் எழுதுவதும் பதில் எதுவும் தெரியாத நிலையில் வெற்று தாள்களை வைப்பதும் வழக்கமான ஒன்றாக உள்ளது.
நம் ஊர் என்று இல்லாது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெவ்வேறு திரிபுகளில் இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்தேறி வருகின்றன. அந்த வகையில் சண்டிகரை சேர்ந்த பொறியியல் படிப்பிற்கான தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வை எழுதிய மாணவர் ஒருவர் தன்னுடைய விடை தாளில் இந்தி திரைப்பட பாடலை விடையாக எழுதி உள்ளார்.
முதல்கேள்விக்கு அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ் படத்தில் இடம்பெற்ற கிவ் மீ சம் சன்ஷைன் என்ற பாடல் மற்றும் பீகே படத்தில் இடம் பெற்றபகவான் ஹை கஹான் ரே து என்ற பாடலையும் எழுதி உள்ளார்.
இரண்டாவது கேள்விக்கான பதிலில் விடைத்தாளை திருத்தும் ஆசிரியரை புத்திசாலி என்று பாராட்டியதுடன் , கடின உழைப்பை என்னால் செய்ய முடியாமல் போனது என் தவறு கடவுளே படிப்பில் கொஞ்சம் திறைமையை கொடுங்கள் என்று எழுதி உள்ளார்.
![]()
|
விடை தாளை திருத்திய ஆசிரியர் நல்ல சிந்தனை ஆனால் இங்கே வேலை செய்ய வில்லை என மாணவருக்கு பதில் அளித்துள்ளார்.
மாணவரின் விடைதாள் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதை தொடர்ந்து 3.6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.16 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் ஒரு சிலர் மாணவரின் கையெழுத்து நன்றாக இருப்பதாகவும் ,மாணவர் எப்படி பலகட்ட செமஸ்டர் தேர்வுகளை கடந்து வந்துள்ளார். எனவும் கருத்து பதிவிட்டு உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement