வாலாஜாபாத்:காஞ்சிபுரம் தாலுகாவில், சிட்டியம்பாக்கம் குறு வட்டம் உள்ளது. இந்த குறு வட்ட வருவாய் ஆய்வாளருக்கு, குடியிருப்புடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இருந்தது. இது, பயன்படுத்த முடியாத நிலையில், கட்டடம் பழுடைந்தது.
அதற்கு பதிலாக, 21 லட்ச ரூபாய் செலவில், குடியிருப்புடன் கூடிய புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடம், இலுப்பப்பட்டு ஊராட்சி அலுவலக கட்டடம் அருகே,ல கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.
கட்டுமான பணிகள் நிறைவு பெற்றும், அலுவலக பயன்பாட்டிற்கு வரவில்லை.
இதனால், சிட்டியம்பாக்கம், இலுப்பப்பட்டு, ஆட்டுபுத்துார், கருர், சிங்காடிவாக்கம், ஆலப்பாக்கம், அத்திவாக்கம் நீர்வள்ளூர், தொடூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த மக்கள் வருவாய் ஆய்வாளரை தேடி காஞ்சிபுரம் செல்ல வேண்டி உள்ளது.
எனவே, சிட்டியம்பாக்கம் கிராமத்தில், கட்டி முடிக்கப்பட்ட குறு வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடத்தை, அலுவலக பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.