ஒரகடம்,:ஸ்ரீபெரும்புதுார்-- ---சிங்கபெருமாள்கோவில் நெடுஞ்சாலை, வண்டலுார் ---- --வாலாஜாபாத் நெடுஞ்சாலை இணையும் நான்கு சாலை சந்திப்பில் ஒரகடம் பஜார் பகுதி அமைந்துள்ளது. இங்கு வணிக கடைகள், உணவகம், துணி கடைகள் அமைந்துள்ளன.
ஒரகடம் சிப்காட்டில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால், இங்கு கால்டாக்சி அதிகம் பயன்பாட்டில் உள்ளன.
ஒரகடம் பகுதிக்கு வரும் கால்டாக்சி தனியார் நிறுவன கார்கள் ஒரகடம் மேம்பாலத்தின் கீழும், நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
இதனால், நெடுஞ்சாலை குறுகலாக மாறுவதால் காலை, மாலை போக்குவரத்து நெரிசல் ஏற்படுறது. இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.