வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்த, சிங்காடிவாக்கம் கிராமத்தில் இருந்து, சின்னையன்சத்திரம் கிராமத்திற்கு செல்லும், 5 கி.மீ., துாரம் சாலை உள்ளது.
இச்சாலை வழியாக, தென்னேரி, மருதம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, சின்னையன்சத்திரம் பகுதி மற்றும் சிறுவேடல், அத்திவாக்கம், ஆலப்பாக்கம் ஆகிய கிராமங்களைச்சேர்ந்த வாகன ஓட்டிகள் சிங்காடிவாக்கம் கிராமம் வழியாக, வாலாஜாபாத் பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது.
இதில், மருதம், சிங்காடிவாக்கம் ஆகிய பகுதிகளில், சாலை ஓரம் சீமைக்கருவேல மரங்கள் புதர்மண்டிக் காணப்படுகிறது. இதனால், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சிங்காடிவாக்கம், மருதம் இடையே சாலை ஓரம் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.