சென்னை : இருளர் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த, பாம்பு பிடி வீரர்களை, மத்திய தகவல் ஒலிபரப்பு துறை, இணை அமைச்சர் முருகன் பாராட்டினார்.
![]()
|
இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த, பாம்புபிடி வீரர்களான, மாசி சடையன், வடிவேல் கோபால் ஆகியோருக்கு, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இருவருக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும், பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இருவரையும், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை, இணை அமைச்சர் முருகன், இன்று (ஏப்.,1)ம் தேதி நேரில் சந்தித்து, வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தனது, சமூக வலைதளபக்கத்தில் முருகன் பதிவிட்டிருப்பதாவது :
அமெரிக்காவுக்கு சென்று, அங்கு மக்களை அச்சுறுத்தி வந்த பாம்புகளை பிடித்து, ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியதற்காக, செங்கல்பட்டு மாவட்டம், சென்னேரி இருளர் குடியிருப்பை சேர்ந்த, மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோர், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றனர்.
![]()
|
இருவரையும், நேரில் சந்தித்தேன். அப்போது, இருவரும் அவர்களின், அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டனர். அவர்கள், இருவரும் மேலும், பல உயரங்களை அடைய வாழ்த்தினேன். பத்மஸ்ரீ விருது கிடைத்ததற்காக, இருவரின் குடும்பத்தினரும், பிரதமர் மோடிக்கு, நன்றியை தெரிவித்தனர்.
இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார்.