இந்தியா மற்றும் தமிழகத்தில் வேலையின்மை விகிதம் உயர்வு!| The unemployment rate in India and Tamil Nadu is on the rise! | Dinamalar

இந்தியா மற்றும் தமிழகத்தில் வேலையின்மை விகிதம் உயர்வு!

Updated : ஏப் 01, 2023 | Added : ஏப் 01, 2023 | கருத்துகள் (7) | |
இந்தியாவில் பிப்ரவரியில் வேலையின்மை விகிதம் 7.45 சதவீதம் ஆக இருந்தது, மார்ச் மாதம் 7.8 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (CMIE) தரவுகளின்படி, இந்தியாவின் வேலையின்மை டிசம்பர் 2022 இல் 8.30 சதவீதமாக உயர்வில் இருந்தது. பின்னர் ஜனவரியில் 7.14 சதவீதமாகக் குறைந்தது. பிப்ரவரியில் மீண்டும் 7.45 சதவீதமாக உயர்ந்தது. தற்போது அதை விட 0.35 சதவீதம் வேலைவாய்ப்பின்மை
The unemployment rate in India and Tamil Nadu is on the rise!  இந்தியா மற்றும் தமிழகத்தில் வேலையின்மை விகிதம் உயர்வு!

இந்தியாவில் பிப்ரவரியில் வேலையின்மை விகிதம் 7.45 சதவீதம் ஆக இருந்தது, மார்ச் மாதம் 7.8 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (CMIE) தரவுகளின்படி, இந்தியாவின் வேலையின்மை டிசம்பர் 2022 இல் 8.30 சதவீதமாக உயர்வில் இருந்தது. பின்னர் ஜனவரியில் 7.14 சதவீதமாகக் குறைந்தது. பிப்ரவரியில் மீண்டும் 7.45 சதவீதமாக உயர்ந்தது. தற்போது அதை விட 0.35 சதவீதம் வேலைவாய்ப்பின்மை நாட்டில் அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களைப் பொறுத்த வரை வேலையின்மை விகிதம் மார்ச்சில் 8.4 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 7.5 சதவீதமாகவும் இருந்ததாக தரவுகள் கூறுகின்றன.

மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் வேலையில்லாத் திண்டாட்டம் அரியானாவில் 26.8 சதவீதம், அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் 26.4 சதவீதம், ஜம்மு காஷ்மீர் 23.1 சதவீதம், சிக்கிம் 20.7 சதவீதம், பீகார் 17.6 சதவீதம் மற்றும் ஜார்கண்ட் 17.5 சதவீதம். வேலையில்லாத் திண்டாட்டம் உத்தரகாண்ட் மற்றும் சத்தீஸ்கரில் 0.8 சதவீதமும், புதுச்சேரியில் 1.5 சதவீதமும், குஜராத்தில் 1.8 சதவீதமும், கர்நாடகாவில் 2.3 சதவீதமும், மேகாலயா மற்றும் ஒடிசாவில் தலா 2.6 சதவீதமும் ஆக உள்ளது.


latest tamil news

தமிழ்நாட்டிலும் வேலையின்மை பிப்ரவரி மாதத்தை விட அதிகரித்திருக்கிறது. பிப்.,யில் 3 சதவீதமாக இருந்தது. மார்ச் மாதம் 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அக்டோபர் - ஜனவரி பண்டிகைக் காலத்துக்குப் பிறகு, சில்லறை வணிகம், விநியோகச் சங்கிலி, தளவாடங்கள் உற்பத்தி, நிதிச் சேவைகள் மற்றும் இ-காமர்ஸ் ஆகியவற்றில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. துறைகளான ஐடி, தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்அப் துறைகளிலும் உலகளாவிய பிரச்னையால் புதிய பணியமர்த்தல் மந்தநிலையை சந்திக்கிறது. இந்த காரணிகள் வேலை வாய்ப்பைக் குறைத்துள்ளன. உற்பத்தி, பொறியியல், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X