புதுடில்லி 'தனிமனித சுதந்திரம் மிகவும் முக்கியமாகும். உரிய சட்ட அனுமதியில்லாமல், ஒருவரை தேவையில்லாமல் சிறையில் வைத்திருக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
டி.எச்.எப்.எல்., எனப்படும் கட்டுமான நிறுவனத்தின் தலைவர்கள் கபில் வாத்வான், தீரஜ் வாத்வான் ஆகியோர், 'எஸ்' வங்கியில் மோசடி செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், ஜாமின் வழங்கி, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
![]()
|
இதை எதிர்த்து, அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள வழக்கில், நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளதாவது:
குற்றவியல் நடைமுறை சட்டத்தின் ௧௬௭வது பிரிவின்படி, கைது செய்யப்பட்டதில் இருந்து 60 அல்லது 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தானாகவே ஜாமின் வழங்க முடியும்.
குற்றங்களை தடுப்பது, பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமையாகும். அதே நேரத்தில் தனிமனித சுதந்திரமும் முக்கியம். தேவையில்லாமல் ஒருவரை சிறையில் அடைத்து வைக்க முடியாது.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement