''சிம்பு படத்துக்கு தியேட்டர் தர்றதுக்கு, முட்டுக்கட்டை போடுதாவ வே...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் அண்ணாச்சி.
''சிம்புன்னு சொல்லாதீரும்... அவர் தான் எஸ்.டி.ஆர்.,னு பேரைமாத்தினுட்டாரோன்னோ...'' என்றார் குப்பண்ணா.
''ஏதோ ஒண்ணு... வெற்றிமாறன் இயக்கத்துல விடுதலை, எஸ்.டி.ஆர்., நடிச்ச பத்து தல படங்கள் முந்தா நாள் வெளியாச்சுல்லா... இதுல, விடுதலை படத்தை, பெரிய இடத்து வாரிசின் நிறுவனம் தான் வெளியிட்டு இருக்கு வே...
![]()
|
''பத்து தல படத்தை வேற நிறுவனம் வாங்கியிருக்கு... அதனால, 'எஸ்.டி.ஆர்., படத்துக்கு அதிக தியேட்டர்கள் தரக்கூடாது'ன்னு வாரிசு நிறுவனத்துல இருந்து வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறதா கோடம்பாக்கம் வட்டாரத்துல சொல்லுதாவ...
''அதுவும் இல்லாம, 'அப்படி மீறி கொடுத்தா, இந்த மாசக் கடைசியில நாங்க வெளியிடப் போற பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தை தரமாட்டோம்'னும் மிரட்டுதாவளாம் வே...'' என்றார், அண்ணாச்சி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement