வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காங்., முன்னாள் தலைவர் ராகுலின் எம்.பி., பதவி பறிபோன பின், அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை ஒரு மாதத்திற்குள் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பார்லிமென்டின் சென்ட்ரல் ஹாலில் காங்கிரஸ் சீனியர் தலைவர் ஒருவருக்கும், மத்திய அமைச்சர் ஒருவருக்கும் நடந்த பேச்சு, இப்போது புதுடில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த காங்., தலைவர், 'எனக்கு பெரிய பங்களாவை ஒதுக்கியுள்ளீர்கள்; தினமும் பலர் வந்து போகின்றனர்; அனைவருக்கும் டீ, காபி கொடுத்தே நிறைய பணம் செலவாகிறது.
'அதோடு என் தொகுதியிலிருந்து வரும் பலரும் இந்த பங்களாவில் தங்குகின்றனர்' என, மத்திய அமைச்சரிடம் புலம்பினாராம்.
![]()
|
'சரி நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்' என அமைச்சர் அவரிடம் கேட்க, 'பெரிய பங்களாவிற்கு பதில் சின்னதாக கொடுத்தால் நன்றாக இருக்கும்' என்றாராம் கர்நாடகாவைச் சேர்ந்த அந்த காங்., மூத்த தலைவர்.
அப்படியானால் ஒரு கடிதம் எழுதி அனுப்புங்கள் என மத்திய அமைச்சர் சொல்ல, ஒரு நொடி அமைதியான காங்., தலைவர், 'ராகுலுக்கு என் பங்களா வேண்டுமாம்: அவர் வீட்டை காலி செய்வதால் என் பங்களாவில் தங்கிக் கொள்ள ஆசைப்படுகிறார்; அவர் வரவில்லை என்றால் கடிதம் எழுதி தருகிறேன்' என வருத்தத்தோடு சொன்னாராம்.