வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற போது, இருவரும் தனியாக அரசியல் பேசிய விஷயம் தற்போது வெளியாகிஉள்ளது.
இந்த சந்திப்பில் என்ன பேசினேன் என்பதை அகிலேஷ், புதுடில்லி பத்திரிகையாளர்களிடம் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.
இது பற்றி கூறப்படுவதாவது:
காங்கிரஸ், மாநில கட்சிகளிடம் பெரியண்ணனாக செயல்படுகிறது. அக்கட்சிக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டது. உத்தர பிரதேசத்தில் காங்., அடியோடு அழிந்துவிட்டது. அங்கு 300க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில் காங்கிரசுக்கு 'டிபாசிட்' கூட கிடைக்கவில்லை.
![]()
|
எனவே, தமிழகத்தில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கக் கூடாது. தென் மாநிலங்களில் உள்ள 125 பார்லிமென்ட் தொகுதிகளில், காங்., 10ல் கூட வெற்றி பெறுமா என்பது சந்தேகம். எனவே பார்த்து செயல்படுங்கள்.
இவ்வாறு அவர் தமிழக முதல்வரிடம் சொன்னாராம்.
ஏற்கனவே, 'காங்கிரசுடன் இணைந்து செயல்பட மாட்டோம்; அதனுடன் கூட்டணியும் கிடையாது' என அகிலேஷ் சொல்லி வருகிறார். அதோடு, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தாவுடன் இணைந்து, காங்., - பா.ஜ., அல்லாத கூட்டணியை உருவாக்கவும் அகிலேஷ் முயன்று வருகிறார். இந்நிலையில் அவர், தி.மு.க., தலைவருக்கு தந்த இந்த 'அட்வைஸ்' காங்கிரஸ் தலைவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.