''பா.ஜ.,வுக்கு தாவும் முடிவை மாத்திக்கிட்டாரு பா...'' என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.
''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில, கல்வி அமைச்சரா இருந்தவரை தான் சொல்றேன்... இவருக்கும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த, 'மாஜி' அமைச்சர்கள் ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தமா இருக்குது பா...
''மாஜியை ரெண்டு பேரும் அமுக்கி வச்சிருக்காங்களாம்... இதனால, 'பா.ஜ.,வுக்கு வந்துடுங்க'ன்னு, அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ., ஒருத்தர் துாண்டில் போட்டிருக்காரு பா...
![]()
|
''மாஜியும், தீவிரமா யோசனை பண்ணிட்டு இருந்தாரு... இந்தச் சூழல்ல, பழனிசாமிக்கு சாதகமா தீர்ப்பு வந்து, அவரும் பொதுச் செயலர் ஆகிட்டாரு... இதனால, மாஜியும் மனசை மாத்திட்டு, அ.தி.மு.க.,வுலயே தொடர முடிவு
பண்ணிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''சிவபதி, திருச்சி போயிட்டு எப்ப வந்தீர்...'' என, நண்பரை விசாரித்தபடியே வந்த குப்பண்ணா, ''தானாவே கிளம்பிட்டார் ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு வந்தார்.