வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராகுலின் எம்.பி., பதவி பறிபோனதை அடுத்து, சமீபத்தில் காங்கிரஸ், பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகை வரை கண்டன ஊர்வலம் நடத்தியது.
இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற தென் மாநில எம்.பி.,க்களுக்கு, காங்., பொதுச் செயலர் வேணுகோபால் ஒரு உத்தரவிட்டாராம்.
'தயவு செய்து ஊர்வலத்தில் யாரும் வேஷ்டியில் வர வேண்டாம்; அனைவரும் குர்தா, பைஜாமா அல்லது பேன்ட் அணிந்து வர வேண்டும்' என்றாராம்.
![]()
|
இப்படி திடீரென வேஷ்டியில் வர வேண்டாம் என சொல்லப்பட்ட நிலையில், திண்டாடிய சில தென் மாநில எம்.பி.,க்கள், தங்களிடம் இருந்த பழைய பேன்ட்களை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனராம்.
கடந்த முறை இப்படி ஒரு கண்டன ஊர்வலம் நடக்கையில், புதுடில்லி போலீசார், எம்.பி.,க்களை பிடித்து இழுத்த போது வேஷ்டி கையோடு வந்துவிட்டது. இதை சில புகைப்படக்காரர்கள் படம் எடுத்து, வேஷ்டியில் இல்லாத இந்த எம்.பி.,க்களின் படங்கள் பத்திரிகைகளில் வெளியிடவே, அவர்களுக்கு அவமானமாகி விட்டது.
எனவே, 'எம்.பி.,க்களுக்கு மீண்டும் இப்படியொரு இக்கட்டான நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, அவர்களை பேன்ட் அல்லது குர்தா அணிய சொன்னேன்' என்றாராம் வேணுகோபால்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement