ரூ.16 ஆயிரம் கோடிக்கு தளவாடம் ஏற்றுமதி

Added : ஏப் 02, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: 'கடந்த நிதியாண்டில், 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:மென்பொருள் அல்லாத ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் கடந்த நிதிஆண்டில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 16
Logistics exports worth Rs.16 thousand crores  ரூ.16 ஆயிரம் கோடிக்கு தளவாடம் ஏற்றுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: 'கடந்த நிதியாண்டில், 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:

மென்பொருள் அல்லாத ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் கடந்த நிதிஆண்டில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தளவாடங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்பட்டுள்ளன.

இது, இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவாகும். கடந்த, 2016 - 17ல் தான், முதல் முறையாக ராணுவ தளவாடங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.


latest tamil news


அந்த ஆண்டில், 1,521 கோடி ரூபாய் மதிப்பிலான தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

தற்போது ஏற்றுமதி மதிப்பு, 10 மடங்கு அதிகரித்துள்ளது. வரும் 2025க்குள், 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ், இந்த சாதனை மேலும் தொடரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது' என தெரிவித்துள்ளார்.


ஏவுகணை கப்பல்


கேரளாவின் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடற்படைக்காக, 8,805 கோடி ரூபாய் மதிப்புள்ள, நவீன வசதிகளுடன் கூடிய ஏவுகணைகளை ஏவும் திறன் உடைய ஆறு கப்பல்கள் கட்டும் பணி துவங்கவுள்ளது.

வரும் 2027 மார்ச்சில் இருந்து, இந்த கப்பல்களை வரிசையாக பயன்பாட்டுக்கு தயாராகி விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
02-ஏப்-202308:52:45 IST Report Abuse
Kasimani Baskaran அருமை... ஏற்றுமதியால் பொருளாதாரம் ஸ்திரப்படும்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-ஏப்-202308:22:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சென்ற ஐந்து வருடங்களில் இறக்குமதி செய்யப்பட தளவாடங்கள் கிட்டத்தட்ட 50 லட்சம் கோடிகள். சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக தளவாட இறக்குமதியில் இரண்டாம் இடம்.
Rate this:
Cancel
பைரவர் சம்பத் குமார் 1). பாராடத்தக்க முன்னேற்றம் தான். 2). அந்தமான் நிகோபர் தீவுகள் மற்றும் இலட்சத்தீவை சிறந்த கப்பற்படை தளமாக உருவாக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X