தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தேவைப்பட்டால் அபராதம் விதிக்கும் நடைமுறையும் அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 43; செங்கல்பட்டு, சேலத்தில் தலா 15; கோவையில் 14 பேர் உட்பட மாநிலம் முழுதும் நேற்று 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றில் இருந்து 97 பேர் குணமடைந்த நிலையிலும் 836 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.