பாட்னா: பீஹாரில் சசரம் பகுதியில் இன்று(ஏப்.,02) வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் படுகாயமடைந்தனர். மீண்டும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த கூடுதல் ராணுவ வீரர்களை பீஹாருக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அங்கு நிலவும் கலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில கவர்னரிடம் கேட்டறிந்தார்.

சில தினங்களுக்கு முன், ராம நவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில் 50 மேற்பட்டோர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
பீஹாரின் சசரம் பகுதியில் இன்று(ஏப்.,02) வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநவமி ஊர்வல நேரத்தில் சசரம் பகுதியில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது.இதில் கல் வீச்சு போன்ற சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தணிந்த நிலையில் மீண்டும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

ராம நவமி பண்டிகையின் போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து ஏற்பட்ட புதிய மோதலைத் தொடர்ந்து ஷரீப், நாலந்தா உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.