சென்னை: கொரோனாவை எதிர்கொள்ள தமிழகம் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கோவையில் 1000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி தயார் நிலையில் உள்ளது. கொரோனா எதிர்கொள்ள தமிழகம் தயார் நிலையில் உள்ளது.
கொரோனா தொற்று தற்போது அதிகரித்துள்ளது. இந்தியாவில் மீண்டும் ஒமிக்கிரான் உருமாறியுள்ளது. பி.ஏ. 2 போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. தமிழகத்தில், 139 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 11 ஆயிரம் மருத்துவ கட்டமைப்புகள் உள்ளன. மருத்துவ சார்ந்த களப்பணியாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.