சித்ரதுர்கா: இஸ்ரோ, இந்திய பாதுகாப்புத்துறை, இந்திய விமானப்படை இணைந்து நடத்திய மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.

இந்திய பாதுகாப்புத்துறை, இந்திய விமான படையுடன் இணைந்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய சிறிய வகை ராக்கெட்டை கர்நாடகாவின் சித்திரதுர்கா ஏரோ நாட்டிக்கல் மையத்திலிருந்து வெற்றிகரமாக இன்று (ஏப்ரல் 02) இஸ்ரோ சோதனை செய்தது. இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து இஸ்ரோ அதிகாரி கூறியிருப்பதாவது:
செயற்கைகோள்களை விண்ணில் புவிவட்ட பாதையில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும். இன்று நடந்த மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடித்துள்ளது. மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ஏவுகணைகளை தயாரிப்பது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.