சென்னை: தமிழகம் வந்த மலேசியா நாட்டின் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சிவக்குமாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசு முறை பயணமாக, மலேசியா நாட்டின் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சிவக்குமார் தமிழகத்திற்கு வந்தார். அவரை சென்னை விமான நிலையத்தில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வரவேற்றார்.
அப்போது குரோம்பேட்டை நாசர், ராதாகிருஷ்ணன், சுப்பிரமணி, கீர்த்திவர்மன், விஜயகுமார் சந்தானம், பெரிஷ் ஜெகதீஷ், ஏம்நாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.