கல்லூரிக்கு வந்துக்கோ ; காதல் பண்ணிக்கோ., சீனாவில் " ஜில்லு" ன்னு ஒரு ஆப்பர்

Updated : ஏப் 02, 2023 | Added : ஏப் 02, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
பீஜிங்: சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்த நிலையில், காதல் செய்வதற்காக கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் தொகை சரியத் துவங்கியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில், மிக மோசமான மக்கள் தொகை சரிவை நாடு சந்தித்து வருவதாக சீன அரசு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் காரணமாக, வேலைக்கு ஆட்கள்

பீஜிங்: சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்த நிலையில், காதல் செய்வதற்காக கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.




latest tamil news


சீனாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் தொகை சரியத் துவங்கியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில், மிக மோசமான மக்கள் தொகை சரிவை நாடு சந்தித்து வருவதாக சீன அரசு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் காரணமாக, வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் சிரமம், நுகர்வோர் தேவையில் சுணக்கம், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட சிக்கல்களில் சீனா சிக்கியுள்ளது.


எனவே, மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை சீன அரசு எடுத்து வருகிறது. இதற்கு பல புதுமையான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவிக்கும்படி மாநில அரசுகளுக்கு சீன அரசு உத்தரவிட்டது.



இந்த நிலையில், பிறப்பு விகிதம் சரிவை எதிர்கொள்ளும் வகையில் சீனா, மற்றொரு முயற்சியில் இறங்கி உள்ளது. இதன்படி, சீனாவில் உள்ள 9 கல்வி மையங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு, ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் காதல் செய்ய விடுமுறை அளிக்க முடிவு செய்யப்ப்டடது. அதன் படி நேற்று(ஏப்ரல் 01) முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை கல்லூரி மாணவர்கள் மாணவியிடம் காதல் செய்ய ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டது.



latest tamil news


இதுபற்றி மியான்யாங் பிளையிங் கல்லூரியின் ஆசியர் கூறுகையில், இந்த விடுப்பு தினத்தில் மாணவர்கள் மாணவிகளுடன் பசுமை நிறைந்த இடத்திற்கு சென்று தங்களது காதலை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறேன். விடுப்பு தினத்தில் மாணவிகளிடம் செலவிடும் நேரத்தை டைரி எழுதுதல், வீடியோ எடுத்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் அவர்களுக்கு வீட்டுப்பாடமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது மக்கள் தொகை அதிகரிப்பதற்கு உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
03-ஏப்-202300:18:25 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN மொத்த மக்கள் தொகையில் 25 - 35 வயதுடையோர் அங்கே எத்தனை சதவிகிதம் ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02-ஏப்-202320:34:40 IST Report Abuse
Ramesh Sargam கல்லூரிக்கு வந்துக்கோ காதல் பண்ணிக்கோ.,... இதற்கு பெற்றோர்கள் ஆதரவு உண்டா? மக்களின் தனி விவகாரத்தில் அரசு எப்படி முடிவு எடுக்க முடியும்? அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களுக்கு அரசு ஏதாவது 'நிதி' கொடுக்கிறதா...?
Rate this:
Cancel
V GOPALAN - chennai,இந்தியா
02-ஏப்-202315:23:23 IST Report Abuse
V GOPALAN It is happening in all schools in our state also
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X