வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. வலுவாக உள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நிர்வாகிகள் கூட்டத்தில் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை. அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. வலுவாக உள்ளது. கூட்டணி குறித்த கேள்வியை தி.மு.க.,விடம் தான் கேட்க வேண்டும். அக்கூட்டணியில் தான் சலசலப்புகள் உள்ளது.
தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சியடைகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்சி தலைவர்களாக இருந்தவர்கள் தங்களது பங்களிப்பை அளித்து கட்சியை சிறப்பாக நடத்தினர்.

இந்திய அளவில் 150 தொகுதிகளை கட்சி மேலிடம் அடையாளம் கண்டுள்ளது. அங்கு வெற்றி பெற அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதில், தமிழகத்தில் 9 தொகுதிகள் உள்ளன. கட்சியின் மேலிடத்தின் வழிகாட்டுதலின்படி எங்களது பணி தொடரும். இவ்வாறு முருகன் கூறினார்.