தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த, தம்பியை, அண்ணன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகோவில் சில்லாலாநத்தம் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரின் மகன்கள் முத்துராஜ் மற்றும் நல்ல தம்பி. இதில் இரண்டாவது மகன் நல்லதம்பி தன்னிடமிருந்த பல லட்ச ரூபாய் பணத்தை இழந்ததுடன், தனது அண்ணன் முத்துராஜிடம் ரூபாய் 3 லட்சம் கடனாக வாங்கி அந்த பணத்தையும் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முத்துராஜ் தனது தம்பி நல்ல தம்பியை பண்டாரம் பட்டி அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தலையில் இரும்பு கம்பியால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.