மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாத உற்சவம் நடைபெறும் வழக்கம், அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 7ம் நாள் திருவிழாவான இன்று(ஏப்ரல் 02) தேரோட்டம் நடைபெற்றது.
திருத்தேரோட்ட விழாவை வைத்தீஸ்வரன் கோவில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து துவக்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.