வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாட்டில் காங்., ஆட்சியின் போது ரூ.4.82 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என பாஜ., வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை மக்களுக்கு புரியும் வகையில், பாஜ., வீடியோவாக வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவிற்கு 'காங்கிரஸ் பைல்சின் முதல் எபிசோடு' . காங்கிரஸ் ஆட்சியின் நடந்த ஊழல்களை பாருங்கள் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அதில், ‛ காங்கிரஸ் கட்சியின் 70 ஆண்டு கால ஆட்சியில், ரூ.4 , 82 ,069 கோடி பொதுமக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை கொண்டு, 24 ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பல்கள், 300 ரபேல் போர் விமானங்கள் ஓராயிரம் மங்கள் திட்ட பணிகளை உருவாக்கி செய்து இருக்கலாம். ஆனால் காங்., சுட்சியில் எந்த திட்டங்களும் உருவாக்கப்பட வில்லை.

நிலக்கரி ஊழல் ரூ.1.86 லட்சம் கோடி,
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ரூ.1.76 லட்சம் கோடி,
எம்என்ஆர்இஜிஏ ஊழல் ரூ.10 லட்சம் கோடி,
காமன்வெல்த் ஊழல் ரூ.70,000 கோடி,
இத்தாலியுடனான ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ரூ.362 கோடி லஞ்சம் என பல ஊழல்கள் நடந்துள்ளன.
அந்த நாட்களில், காங்கிரஸ் ஊழல்கள் செய்தித்தாள்களில் நிரப்பப்பட்டுள்ளன. இவ்வாறு வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வெறும் டிரைலர் என்றும், படம் இன்னும் முடியவில்லை பாஜ., காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை தொடர்ந்து மக்கள் மத்தியில் வெளிக் கொண்டு வரும் எனக் கூறப்படுகிறது.