காரைக்குடி : ராமநாதபுரம் பொதுப்பணித்துறை (கட்டுமானம்) செயற்பொறியாளராக கண்ணன், 59 உள்ளார். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரனுக்கு கிடைத்த தகவலின்பேரில் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள அரசு ..விருந்தினர் மாளிகையில் நேற்று மாலை சோதனையில் ஈடுபட்டனர். செயற்பொறியாளரின் ஓய்வு அறை மற்றும் ஜீப்பில் ரூ.32 லட்சத்து 68ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் காரைக்குடி பர்மா காலனியில் உள்ள கண்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஜான் பிரிட்டோ தலைமையில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர்.