வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: சிவசேனாவின் உத்தவ் தாக்கரேயை, தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் சந்தித்தார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்டதொடரின் போது எதிர்கட்சிகள் அதானி விவகாரத்தை கையில் எடுத்து பார்லியை முடக்கினர். அப்போது அதானிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார் சரத்பவார்.
இந்நிலையில் உத்தவ் தாக்கரேயை, சரத்பவார் நேரில் சந்தித்து பேசினார். ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது அதானி விவகாரம் குறித்து இருவரும் பேசினர். இந்த சந்திப்பின் போது, சரத்பவார் மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலே, சிவசேனாவின் சஞ்சய் ராவத் ஆகியோர் உடன் இருந்தனர்.