புதுடில்லி ''உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை ரஷ்யா கைப்பற்றிய சம்பவம், இந்தியாவுக்கு ஒரு பாடமாகும்,'' என, உக்ரைன் வெளியுறவுத் துறை முதல் இணையமைச்சர் எமினே சபரோவா எச்சரித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்தாண்டு பிப்.,ல் ரஷ்யா போர் தொடுத்தது. அது இன்னும் தொடர்கிறது. இந்நிலையில், உக்ரைனின் வெளியுறவுத் துறை முதல் இணையமைச்சர் எமினே சபரோவா இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
![]()
|
வெளியுறவு கொள்கைகள் தொடர்பாக ஆய்வு செய்யும் புதுடில்லியைச் சேர்ந்த உலக விவகாரத்துக்கான இந்திய கவுன்சில் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சபரோவாபங்கேற்றார்.
வெளியுறவுத் துறை நிபுணர்கள், துாதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
ஒரு செய்தியுடன் இந்தியாவுக்கு வந்துள்ளேன். இந்தியா மற்றும் உக்ரைன் இடையேயான உறவுக்கு பெரிய வரலாறு உள்ளது. தற்போது புதிய உறவைத் துவக்குவதற்காக வந்துள்ளேன். இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன.
எங்களுடைய அண்டை நாடான ரஷ்யா, உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை, ௨௦௧௪ல் கைப்பற்றியது. அதன்பின், தற்போது எங்கள் நாட்டை முழுதுமாக கைப்பற்றும் நோக்கத்துடன் போர் தொடுத்துள்ளது.
இந்த கிரீமியா சம்பவம் இந்தியாவுக்கு ஒரு பாடமாக இருக்கும். மிகவும் ஆபத்தான சீனா மற்றும் பாகிஸ்தானை தன் அண்டை நாடுகளாக இந்தியா கொண்டுள்ளது.
இந்த இரு நாடுகளும் எல்லைப் பிரச்னை தொடர்பாக தொடர்ந்து நெருக்கடிகள் தந்து வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜி - ௨௦ அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்தாண்டு செப்.,ல் புதுடில்லியில் இதன் மாநாடு நடக்க உள்ளது. இதில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பேசுவதற்கான வாய்ப்புகள் தொடர்பாக விவாதிக்க, சபரோவா வந்துள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement