வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: சமூக வலைதளங்கள் தொடர்பான இந்திய சட்டங்கள் கடுமையானதாக உள்ளது என டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க் கூறியுள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த பிபிசி நிறுவனம், குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படத்தை தயாரித்தது. இதற்கு மத்திய அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. இந்த ஆவணப்படத்தை வெளியிடவும் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் 50 பதிவுகளை நீக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

இது தொடர்பாக, எலான் மஸ்க் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: குறிப்பிட்ட பிரச்னை தொடர்பாக எனக்கு தெரியாது. அது தொடர்பாக இந்தியாவில் என்ன நடந்தது என்பது தெரியாது. சமூக வலைதளங்கள் தொடர்பான இந்திய சட்டங்கள் கடுமையானதாக உள்ளது. ஒரு நாட்டின் சட்டத்தை மீறி எங்களால் செயல்பட முடியாது. எங்கள் ஊழியர்கள் சிறைக்கு செல்ல வேண்டுமா அல்லது சட்டத்திற்கு அடி பணிய வேண்டுமா என்ற வாய்ப்பு எங்கள் முன் வந்த போது, நாங்கள் சட்டத்தின் முன்பு அடிபணிந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.