வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரை, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார்.
2024 பாராளுமன்ற லோக்சபா தேர்தலில், பா.ஜ.வுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீஹார் ஐக்கிய ஜனதா தள முதல்வர் நிதிஷ்குமார் இறங்கியுள்ளார். டில்லி சென்றுள்ள நிதிஷ்குமார், காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் எம்.பி., ராகுல் ஆகியோரை சந்தித்தார்.
![]()
|
இதையடுத்து டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார். இவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டியது அவசியம். என்றனர்.