வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து ராகுல், புதுடில்லியில் தான் தங்கியிருந்த அரசு பங்களாவை காலி செய்தார்.
மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள தொழிலதிபர்கள் லலித் மோடி, நிரவ் மோடி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடியையும் குறிப்பிடும் வகையில், 'திருடர்களின் பெயர்கள் எப்படி மோடி என முடிகிறது' என, காங்., முன்னாள் தலைவர் ராகுல், 2019ல் பேசினார்.
இது தொடர்பாக, குஜராத்தின் சூரத் நகரில் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அவதுாறு வழக்கில், நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது.
![]()
|
இதையடுத்து, லோக்சபா எம்.பி., பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்; அரசு சார்பில் அளிக்கப்பட்ட இல்லத்தையும், ஏப்.22க்குள் காலி செய்ய வேண்டும் என அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
இந்நிலையில், தான் வசித்த பங்களாவை காலி செய்த ராகுல், அதை அரசிடம் ஒப்படைத்தார். புதுடில்லி ஜன்பத் சாலையில் உள்ள தன் தாய் சோனியா இல்லத்தில் தங்க உள்ள ராகுல், தன் உடைமைகளை இரு வாகனங்களில் எடுத்து சென்றார்.