திண்டுக்கல்லில் இன்று துவங்குகிறது தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி
திண்டுக்கல்லில் இன்று துவங்குகிறது தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி

திண்டுக்கல்லில் இன்று துவங்குகிறது தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி

Added : ஏப் 15, 2023 | |
Advertisement
திண்டுக்கல் : 'பிளஸ் 2க்கு பின் எதிர்காலத்தில் எந்த படிப்புக்கு, எந்த கல்லூரியை தேர்வு செய்யலாம்' என்ற அரிய ஆலோசனைகளை வழங்கும் தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸூடன்இணைந்து நடத்தும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில்உள்ள பி.வி.கே.,மஹாலில் இன்றும் (ஏப்.,15), நாளையும் (ஏப்.,16) கோலாகலமாக நடக்கிறது.பிளஸ் 2 முடித்து உயர்கல்வியை
Dindigal starts today in Dindigul Students come and ask for higher education advice   திண்டுக்கல்லில் இன்று துவங்குகிறது தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சிதிண்டுக்கல் : 'பிளஸ் 2க்கு பின் எதிர்காலத்தில் எந்த படிப்புக்கு, எந்த கல்லூரியை தேர்வு செய்யலாம்' என்ற அரிய ஆலோசனைகளை வழங்கும் தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸூடன்இணைந்து நடத்தும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில்உள்ள பி.வி.கே.,மஹாலில் இன்றும் (ஏப்.,15), நாளையும் (ஏப்.,16) கோலாகலமாக நடக்கிறது.

பிளஸ் 2 முடித்து உயர்கல்வியை தேர்வு செய்யும்மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான இந்நிகழ்ச்சியில் பல்வேறு கருத்தரங்குகள் நடக்கின்றன.

இதில் நீட், ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான டிப்ஸ்கள், ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், ஓப்பன்ஏ.ஐ., குவாண்டம் கம்ப்யூட்டிங், ஐ.ஓ.டி., கிளவுட் கம்ப்யூட்டிங், மெட்டாவர்ஸ், சி.எஸ்., ஐ.டி., டேட்டா சயின்ஸ், பிக் டேட்டா, மிஷின் லேர்னிங் படிப்புகளை எங்கு படிக்கலாம், இதற்கான தகுதிகள் என்ன, எந்த கல்லுாரிகள் சிறந்தவை என்பது குறித்து நிபுணர்கள் விளக்கவுள்ளனர்.

கலை அறிவியல் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள், மருத்துவம் மற்றும் துணை மருத்துவ படிப்புகளும் வாய்ப்புகளும், சட்டம், சி.ஏ., படிப்பதால்என்னென்ன வாய்ப்புகள்,தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மற்றும் பிரத்யே கல்வி நிறுவனங்கள் போன்ற தலைப்புகளில் 10க்கும் மேற்பட்ட நிபுணர்கள் கல்வியாளர்கள் நேரடியாக ஆலோசனை வழங்க உள்ளனர்.


அனைத்தும் ஒரே இடத்தில்தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் கண்காட்சியில் ஸ்டால்கள் அமைக்கவுள்ளன. இதன்மூலம் விண்ணப்பம் முதல் மாணவர்கள் சேர்க்கை வரை அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெறலாம். மாணவர்களே உயர்கல்வி குறித்து தெளிவு பெற, வேலைவாய்ப்பு தரும் படிப்புகள், நல்ல கல்லுாரிகளை தேர்வு செய்து உங்கள் எதிர்காலம் ஜொலிக்க நிகழ்ச்சிக்கு வாருங்கள்.


பதில் சொன்னால்பரிசு உண்டுகாலை 10:00 மணி, மாலை 4:00 மணிக்கும் நடக்கும் கருத்தரங்கில் மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும். சரியான விடை அளிப்பவர்களுக்கு கருத்தரங்கு முடிவில் லேப்டாப், டேப்லெட், வாட்ச் பரிசாக அளிக்கப்படும். காலை 10:30 முதல் மாலை 6:30 மணி வரை கல்வி நிறுவனங்களின் கண்காட்சி நடக்கும்.

தினமலர், கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில் பவர்டு பை கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அமிர்தா பல்கலை, நாலெட்ஜ் பார்ட்னராக தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ன்ட் ஆப் இந்தியா செயல்படுகிறது. அனுமதி இலவசம்.

ஆன்லைனில் இலவசமாக பதிவு செய்ய www.kalvimalar.com இணையதளத்தை அணுகலாம் அல்லது 91505 74441 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு 'Hi' என டைப் செய்து அனுப்பலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X