மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் ராய்கார் அருகே கபோலியில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கோரேகான் பகுதியின் சியான் என்ற இடத்தையும், சிலர் பால்கார் மாவட்டம் விரார் என்ற பகுதியையும் சேர்ந்தவர்கள். பாரம்பரிய இசைக்குழுவினரான இவர்கள் புனேயில் ஒரு நிகழ்ச்சியை முடித்து விட்டு, மும்பைக்கு சென்று கொண்டிருந்த போது விபத்து நேரிட்டது.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.