வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்.பி., அட்டிக் அஹமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அஹமது ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்த ராஜு பால் என்பவர் 2005ல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நிழல் உலக தாதாவும்,சமாஜ்வாதி கட்சியின் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,வான அட்டிக் அஹமது மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
![]()
|
ராஜு பால் படுகொலை வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால் என்பவர் கடந்த பிப்., 24ல், பிரயாக்ராஜில் உள்ள அவரது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் அவரது பாதுகாப்பு போலீசார் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில், அட்டிக் அஹமது, அவரது சகோதரர் அஷ்ரப், மகன் ஆசாத், அவரது கூட்டாளி குலாம் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, அட்டிக் அஹமதுவையும், அவரது சகோதரர் அஷ்ரபையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், , கடந்த 15ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக முக்கிய குற்றவாளியான அட்டிக் அஹமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் பிரயாக்ராஜ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மூன்று பேர் அட்டிக் மற்றும் அவரது சகோதரரை சுட்டுக் கொன்றனர்.இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தேசிய மனித உரிமை ஆணையம் பாஜ.,முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.