வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
ஜி.ரங்கராஜன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னையில் சமீபத்தில், புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 'சமூக நீதி, சகோதரத்துவம், சமதர்மம் போன்ற கருத்துகளை பின்பற்றும் சக்திகள், நாடு முழுதும் ஒன்று சேர வேண்டும்' என, அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், மிலாது நபிக்கு விடுமுறை அறிவித்தது, உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, 'வக்பு' வாரியத்திற்கு மானியம் வழங்குவது, முஸ்லிம்களுக்கு உள் இட ஒதுக்கீடு என, கருணாநிதி செய்த நன்மைகளையும் பட்டியலிட்டு, அதே வழியில் தன் திராவிட மாடல் அரசும், பீடு நடை போடும் என்று, மார்தட்டி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் அவர்களே, உங்களிடம் நான் கேட்க விரும்புவதாவது...
உருது பேசும் முஸ்லிம்களை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்த தி.மு.க., அரசு, முன்னேறிய சமூகத்தினரில் நலிந்த பிரிவினருக்கு, மத்திய அரசு வழங்கிய, 10 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டும் எதிர்ப்பது ஏன்?
![]()
|
ஒரு தம்பிடி வருமானம் கூட தராத வக்பு வாரியத்துக்கு, மானியத்தை கொட்டிக் கொடுப்பது ஏன்?
15 சதவீத சிறுபான்மையினர் ஓட்டுக்காக, பெரும்பான்மையான மக்கள் பின்பற்றும், ஹிந்து மதத்தை பழிப்பது ஏன்... அதற்கு எதிராக விஷத்தை கக்குவது ஏன்? இதுதான் உங்களின் திராவிட மாடல் ராஜ நீதியா, தர்மமா?
ஹிந்து அறநிலையத் துறையை கைப்பற்றியது போல, வக்ப் வாரியம் மற்றும் சர்ச்சுகளை கையகப்படுத்தும் துணிச்சல், ஆண்மை, திராணி, உங்களுக்கும், தி.மு.க., அரசுக்கும் வராதது ஏன்?
ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், முஸ்லிம் வேடம் தரித்து, நோன்பு கஞ்சி குடித்த நீங்கள், ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன்?
தேர்தல் நேரத்தில் மட்டும், ஹிந்துக்களின் ஓட்டுகளை ஏமாற்றி அபகரித்து, பின், அவர்களை வஞ்சிப்பது தான், நீங்கள் சொல்லும் சமூக நீதி, சகோதரத்துவம் மற்றும் சமதர்மமா?
இதற்கெல்லாம் பதில் சொல்லுங்கள் பார்ப்போம். முதல்வர் அவர்களே... உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள்; உங்களின் செயல்பாடுகளை, 80 சதவீத ஹிந்துக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். காலம் வெகு விரைவில் கனியும். அப்போது, ஹிந்துக்கள் ஒன்றுபட்டு, ஜனநாயக முறைப்படி, உங்களுக்கு தக்க பதிலடி கொடுத்து, பாடம் புகட்டுவர்.
அப்போது, தி.மு.க., மற்றும் அதன் தோழமை கட்சிகளின், போலி மதசார்பின்மை அம்பலத்துக்கு வந்து, ஆட்டம் காணும்; மிதப்பில் இருக்காதீர்கள்!