தமிழக கவர்னர் அரசியல் செய்கிறார் என தி.மு.க.,வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தினமும் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் புதுடில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக ஒரு செய்தி அலசப்படுகிறது.
![]()
|
குறைந்த பட்சம் மூன்று மாநில கவர்னர்கள் தங்கள் பதவி களை ராஜினாமா செய்ய தயாராகி வருகின்றனர் என்பதுதான் அந்த செய்தி. இந்த மூன்று பேரில் ஒருவர் தென்மாநிலத்தைச் சேர்ந்தவர். மற்ற இருவரும் வட மாநிலங்களில் கவர்னர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். இதில் ஒருவர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
![]()
|
இந்த மூவரும் தங்கள் மாநிலங்களில் தீவிர அரசியலுக்கு மீண்டும் வர விரும்புகின்றனர். 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக இவர்கள் பதவி விலகலாம் என சொல்லப் படுகிறது. வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடவும் இவர்களுக்கு ஆசை உள்ளது. ஆனால் பா.ஜ., மேலிடம் இவர்களுக்கு 'சீட்' கொடுக்குமா, பிரதமர் மோடி இதற்கு சம்மதிப்பாரா என்பது தான் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement