வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கலபுர்கி: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என அக்கட்சி முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் மே 10ல் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கலபுர்கி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், கொட்டும் மழையிலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பேசினார்.
அவர் பேசியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும். காங்., ஆட்சியை யாராலும் தடுக்க முடியாது. பா.ஜ., 40 என்ற எண்ணை மிகவும் விரும்புகிறது. இதனால், அக்கட்சி 40 இடங்களை மட்டும் அளிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். இது உறுதியாகி உள்ளது. காங்கிரஸ், 150 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.

மாநிலத்தில் 50 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த பணியிடங்களை நிரப்புவோம். ஐஐடி.,க்கள் மற்றும் ஐஐஎம்.,கள் வரும் வகையில் சிறப்பு கல்விக்கொள்கையை அமைப்போம். மக்களுக்கு சிறப்பு பலன்களை வழங்குவோம். இவ்வாறு ராகுல் பேசினார்.