செஞ்சி : வல்லம் ஒன்றியம், நெகனுார் கிராமத்தில் வல்லம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வடக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் நடராஜ், ஒன்றிய இணை செயலாளர் ஜோதி வெங்கடாஜலம், கிளைச் செயலாளர்கள் சுப்ரமணியன், ஆர். மகாலிங்கம், பட்டி மகாலிங்கம், சுந்தர், பொன்னுசாமி, கருணாகரன் முன்னிலை வகித்தனர்.
எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணைச் செயலாளர் காமராஜ் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் கண்ணன் சிறப்புரையாற்றி, பூத் கமிட்டி உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார்.
பேரவை ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் ஜீவா ரவி, வெங்கடேசன், துரை, நிர்வாகிகள் தர்மலிங்கம், அசோக்குமார், நடராஜன், காசிநாதன், சசிகுமார், முருகேசன், ஜெயச்சந்திரன், கண்ணன், எம். குமார், வெங்கடேசன், கே.குமார், உமா, ஷீலா, தமிழரசி, ராணி, உஷா, சாந்தான லட்சுமி, வைதேகி, குப்பு, சங்கர், சுந்தரமூர்த்தி, பாலமுருகன், சுபாஷ், ஜெயராமன், கன்னியப்பன், இளங்கோவன், கன்னியம்மாள், ராஜேந்திரன், சிலம்பரசன், சுப்ரமணியன், சக்திவேல், முத்துலட்சுமி பங்கேற்றனர்.