உடுமலை:தமிழக மின் வாரியத்தில், 17 ஆயிரம் கள உதவியாளர், 8,000 கம்பியாளர் உட்பட, 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.
தற்போது, 10, 260 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பை திரும்ப பெற்று, 8,000 களப்பணியாளர் பணியிடத்துக்கு, ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
ஒப்பந்த ஊழயிர்கள் கூறியதாவது:
ஐகோர்ட் உத்தரவை பின்பற்றி, மின்வாரிய காலிப்பணியிடத்தை, ஒப்பந்த தொழிலாளர் வாயிலாக, நிரப்ப வேண்டும். புதிதாக பணியாளர் நியமனம் செய்யும் உத்தரவை மறுபரிசீலனை செய்து, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மின்கம்பம் ஏறுதல், மின்தடையை சீரமைத்தல், இயற்கை சீற்றத்தின் போது ஏற்படும் பாதிப்பை தணிக்கும் பணிகளில், அனுபவம் வாய்ந்த ஒப்பந்த தொழிலாளர் மட்டுமே கைகோர்த்தனர்.
ஒப்பந்த தொழிலாளருக்கு முன்னுரிமை அடிப்படையில், களப்பணியாளராக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.