பொங்கலுார்:தொங்குட்டிபாளையம் ஊராட்சி ராக்கியாகவுண்டம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில், ஊராட்சி தலைவர் பிரியா தலைமையில் கிராம சபா கூட்டம் நடந்தது.
அதில், ஆண்டிபாளையம், மசநல்லாம்பாளையத்துக்கு புதிய ரேஷன் கடை, ஐஸ்வர்யா நகருக்கு சாக்கடை வசதி, கரட்டுப்பாளையத்தில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து வேறு இடத்தில் வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
l காட்டூர் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் தலைவர் சதீஷ்குமார் தலைமையில், துவக்கப்பள்ளியில் நடந்தது. அரசு உயர் நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும். வெள்ளநத்தம் மற்றும் காட்டூர் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.