மதுரை : மதுரை பாமா நகர் முகம்மது ஆசிக். ஒரு நிறுவன லேப்டாப்பை ரூ. 1 லட்சத்து 28 ஆயிரத்து 610க்கு வாங்கினார். செயல் இழந்தது.
நிறுவனத்திற்கு எதிராக மதுரை நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தலைவர் பாரி, உறுப்பினர்கள் விமலா, வேலுமணி அமர்வு:
லேப்டாப்பை நிறுவனம் திரும்பப் பெற்று, மனுதாரருக்கு புதிதாக வழங்க வேண்டும். மனுதாரருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக இழப்பீடு ரூ.1 லட்சம், வழக்கு செலவு ரூ.5000 வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.