ராமநாதபுரம், : -ராமநாதபுரத்தில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் மே தின ஊர்வலம் நடந்தது.
ஊர்வலம் வழிவிடும் முருகன் ேகயிலில் துவங்கி அரண்மனையை அடைந்தது. பின்னர் பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர்கள் ராதா, சந்தானம், செயலாளர்கள் ஏ.ஐ.டி.யு.சி., ராஜன், சி.ஐ.டி.யு., சிவாஜி முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, சி.ஐ.டி.யு., மாநில துணைத்தலைவர் டெய்சி பேசினர். நிர்வாகிகள், உறுப்பினர் பங்கேற்றனர்.
இதுபோல புதிய தமிழகம் கட்சி சார்பில், காலையில் மே தின ஊர்வலம் நடந்தது. மாவட்டச் செயலாளர் பாலுசாமி தலைமை வகித்தார். இணை செயலாளர் மலைச்சாமி முன்னிலை வகித்தார்.
ஊர்வலம் அரண்மனை அருகே துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வழி விடும் முருகன் கோயிலில் முடிந்தது. துணை செயலாளர்கள் முத்து கூரி, அற்புதராஜ், முனியசாமி, மகேஷ் குமார் பங்கேற்றனர்.
அ.ம.மு.க., பொதுகூட்டம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் அ.ம.மு.க., சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் முனியசாமி, முருகன் தலைமை வகித்தனர். தொழிற்சங்க பேரவை பூபதி வரவேற்றார். மாநில ஜெ., பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை பேசினார். மாநில தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு செயலாளர் ஜெஸிமாபானு, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.